ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள்
ஆன்லைனில் புதியவர்களைச் சந்திப்பது உற்சாகமாக இருக்கலாம், ஆனால் அதில் சில சவால்களும் உள்ளன. அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு முன் ஒருவரைத் தெரிந்துகொள்ள, குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற செயலியின் இலவச வசதிகளைப் பயன்படுத்தி உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
⚠️ கவனிக்க வேண்டிய 3 எச்சரிக்கை அறிகுறிகள்:
1. கைப்பேசி எண்ணைக் கேட்பது
பொருத்தம் ஏற்பட்டவுடனே உங்கள் கைப்பேசி எண்ணைக் கேட்பது. செயலியில் அரட்டையும் குரல்/வீடியோ அழைப்புகளும் இலவசம், எனவே உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: அவருக்கு ஏன் உங்கள் தனிப்பட்ட கைப்பேசி எண் தேவை?
2. வேறு செயலிக்கு மாறச் சொல்வது
வேறொரு செயலியை (எ.கா. Telegram) அல்லது தடை செய்யப்படுவதைத் தவிர்க்கக்கூடிய ஓர் அதிகம் அறியப்படாத செயலியைப் பதிவிறக்கச் சொல்லி, பிறகு உரையாடலை அங்கே தொடர வற்புறுத்துவது. கவனமாக இருங்கள்: பாதுகாப்பு வசதிகளிலிருந்து உங்களைத் தனிமைப்படுத்தும் ஓர் உத்தியாக இது இருக்கலாம்.
3. அழுத்தம் அல்லது கட்டாயப்படுத்துதல்
நீங்கள் விரும்பாதவற்றைச் செய்யுமாறு உங்களுக்கு அழுத்தம் கொடுப்பது, எடுத்துக்காட்டாக நீங்கள் “வேண்டாம்” என்று சொன்ன பிறகும் ஆபாசப் படங்களைத் திரும்பத் திரும்பக் கேட்பது. ஒருவர் உங்கள் எல்லைகளையோ தனியுரிமையையோ மதிக்கவில்லை என்றால், பிற விஷயங்களிலும் பின்னாளில் அவர் உங்களை மதிப்பார் என்பது சந்தேகமே.
💡 நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். ஒருவரை உங்கள் நண்பர்களுக்கோ குடும்பத்தினருக்கோ அறிமுகப்படுத்த உங்களுக்குத் தயக்கமாக இருந்தால், அடுத்த கட்டத்துக்குச் செல்ல இன்னும் நேரம் வரவில்லை என்று அர்த்தமாக இருக்கலாம்.
உங்கள் பாதுகாப்புதான் எப்போதும் முதன்மையானது.